பொது வேட்பாளராக சிறுபான்மை இனத்தவர்?

30.7.14

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண ஆளுநராக ஜீ.ஏ. சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டமை,  அரசாங்கத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் யோசனையை கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸிடம் முன்வைத்துள்ளதாக பேசப்படுகிறது.

அதேவேளை முஸ்லிம் மக்களுக்கு தொடர்ந்தும் ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் கரணமாக முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளது.
இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ்,  கூட்டமைப்பின் யோசனைக்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோ இந்த தகவல்களை உத்தியோகபூர்வமாக ஊர்ஜிதப்படுத்தவில்லை.

0 கருத்துக்கள் :