கச்சதீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை

1.7.14

கச்சதீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கச்சதீவில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீனவர் பாதுகாப்பு பேரவை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று மத்திய அரசு கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், கச்சதீவில் வலைகளை உலர்த்த, மீனவர்கள் ஓய்வெடுக்க உரிமை உள்ளது என்றும், அதே நேரத்தில் கச்சதீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
1974-1976ம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தப்படி பாரம்பரிய உரிமை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு நியாயப்படுத்தக் கூடாது என்றும் மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :