யாழ்:தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்

19.7.14

கொய்யாத்தோட்டம் பழைய பூங்கா வீதி சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 19வயதுடைய அன்ரன் செலஸ்ரா என்ற இளம்பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 10 மணியளவில் உயிரிழந்ததாக இளம்பெண்ணின் கணவர் பொலிஸாரிற்கு அறிவித்ததை அடுத்து
பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்துக்கு இன்று காலை சென்று விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதிவான் மு.திருநாவுக்கரசு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார் .

மேலும் இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :