புலிப்பார்வை - ராஜபக்சேவிடம் ஒப்புதல் வாங்கிய படமா?

31.7.14

இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது புலிப்பார்வை திரைப்படம்.

 இயக்குனர் ப்ரவின் காந்தி இயக்கியிருக்கும் புலிப்பார்வை திரைப்படம், இலங்கை இராணுவத்தின் அட்டூழியத்திற்கு காரணமாயிருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு திரையிட்டுக் காட்டப்பட்டு ஒப்புதல் வாங்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது.

இது குறித்து பேசிய ப்ரவின் காந்தி “ ராஜபக்சேவிற்கு நான் படத்தை போட்டுக்காட்டியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. ஒர் இந்தியனான நான் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற அநியாயத்தை எதிர்த்து எடுக்கும் படத்தை குற்றவாளியிடமே காட்டுவேனா? புலிப்பார்வை திரைப்படத்தின் மையக்கருத்து அமைதியை பின்பற்ற வேண்டும் என்பது தான்.

 கடவுள் ஒவ்வொருவருக்கும் தேவையானதை கொடுத்திருக்கிறார். ஆனால் நம் சக்தியை உபயோகப்படுத்தி அடுத்தவருக்கு சொந்தமானதை அபகரிக்க நினைக்கும்போது தான் பிரச்சனை உருவாகிறது. அதே தான் இலங்கையிலும் நடந்திருக்கிறது. தமிழர்களுக்கு உரிமையுள்ள இடத்தை அவர்கள் கேட்டதில் எந்த தவரும் இல்லை. இதை நான் என் திரைப்படத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

0 கருத்துக்கள் :