எலும்புக் கூடுகள் புலிகளின் சோதியா, மாலதி படைப் பிரிவினுடையது

4.7.14

முகமாலையில் நேற்றும் இன்றும் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் விடுதலைப் புலிகள் இயக்க சோதியா மற்றும் மாலதி படையணியின் பெண் புலிகளது என இனம் காணப்பட்டுள்ளது. முகமாலையின் முன்னரங்கப் பகுதியில் நேற்றும் இன்றும் சீருடைகள், ஆயுதங்கள் உள்ளிட்ட எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.

அதன்படி இன்று மீட்கப்பட்ட எச்சங்களில் பெண் புலிகளது இரண்டு, இலக்க தகடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை சோதியா படையணியைச் சேர்ந்த 2784 மற்றும் மாலதி படையணியைச் சேர்ந்த 1190 தகட்டு இலக்கங்கள் ஆகும். இதன் அடிப்படையில் இவை சோதியா மற்றும் மாலதி படையணியைச் சேர்ந்தவர்களுடையது என இனங்காணப்பட்டுள்ளது.

பலவகையான வெடி பொருட்களும் மீட்பு! 2 ஆம் இணைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான போரின் போது மிகவும் முக்கியத்தவம் வாய்ந்த பகுதியாக முகாமாலைப் பகுதியே விளங்கியது. இங்கு யுத்தகாலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் தற்போதும் அகற்றப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கண்ணிவெடி அகற்றும் பணியின் போது அங்கு எலும்புக் கூடுகள் நேற்று மீட்க்கப்பட்டன. இதே போன்று இன்று காலையும் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்தப் பகுதியிலிருந்து பல்வேறு வகையிலான வெடி பொருட்களும் மீட்கப்பட்டு வருவதாக பளைப் பிரதேச பொலிஸ் அதிகாரி உறுதி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துக்கள் :