முஸ்லிம் ஊழியரின் வாயில் பலவந்தமாக உணவை திணித்து நோன்பை முறித்த சிவசேனா எம்.பிகள்

23.7.14

டில்லியில் நோன்பு அனுஷ்டித்துக்கொண்டிருந்த முஸ்லிம் நபர் ஒருவரின் வாயில் சிவசேனா எம்.பிகள் சிலர் பலவந்தமாக உணவை திணித்து அவரின் நோன்பை முறிக்கச் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

டில்லியிலுள்ள அரச விடுதியொன்றின் உணவகத்தில் தமது தெரிவுக்குரிய உணவு கிடைக்காத ஆத்திரத்தில், அங்கிருந்த ஊழியரின் வாயில் சிவசேனா எம்.பிகள் பலவந்தமாக உணவை திணித்ததாக கூறப்படுகிறது.

ஊழியர் ஒருவரின் வாயில் ரொட்டியை திணிக்கும் காட்சி அடங்கிய வீடியோவொன்றும் வெளியாகியது.

இந்நடவடிக்கை மத நம்பிக்கைகளை மீறும் செயல் என இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைககளிலும் எதிர்க்கட்சி எம்.பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறவில்லை என சிவசேனா எம்.பி ஒருவர் கூறியுள்ளார்.

ஆனால்,  இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ரஞ்சன் பாபுராவ் விச்சாரே இது தொடர்பாக கூறுகையில், தான் தரமான உணவு இல்லாததற்கான எதிர்ப்பை தெரிவிக்கவே முற்பட்டதாக கூறியுள்ளார். 'அந்த ஊழியர் ஒரு முஸ்லிம் என்பதை  தொலைக்காட்சியை பார்த்தபின்னரே தெரிந்துகொண்டேன். இது குறித்து வருந்துகிறேன்' என அவர் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :