மது அருந்தியவர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது

3.7.14

மது அருந்தி விட்டு வீதியில் நடந்து செல்லும் நபர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாதென பூகோட நீதவான் இந்திக காலிங்வங்ச தெரிவித்துள்ளார்.

மது அருந்தி விட்டு வீதியில் நடந்து சென்றனர் என்ற குற்றச்சாட்டில் கை செய்யப்பட்ட மூவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் இதனை கூறியுள்ளார்.
நீதவான் மூவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து நீதவான் மேலும் தெரிவிக்கையில்,
மதுபான தேவையானவர்கள் அதனை அருந்தும் சுதந்திரம் உள்ளது. அது அவர்களின் உரிமை. இதனால் மது அருந்தி விட்டு வீதியில் செல்பவர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை.
மது அருந்தி விட்டு, குழப்பம் ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் அப்படியானவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தலாம் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :