யாழ்.கிரிக்கெட் அணியினர் மீது கம்பஹாவில் சிங்கள காடையர்கள் அட்டகாசம்!- போட்டியிலிருந்தும் வெளியேறினர்!

19.7.14

யாழ்.குடாநாட்டிலிருந்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளுக்காக கம்பஹா சென்றிருந்த யாழ். கிரிக்கெட் வீரர்கள் சிங்கள காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட அசிங்கமான நடவடிக்கைகளினால் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இன்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் குறித்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கால் இறுதி ஆட்டத்தில் யாழ்.மாவட்ட அணி கம்பஹா அணியினை எதிர்த்து விளையாடியது.
இதன்போது யாழ். இளைஞர்களை சிங்கள காடையர்கள், இடித்து வீழ்த்தியுள்ளதுடன் கடுமையாக சிங்களத்தில் பேசியும் உள்ளனர்.

இந்நிலையிலும் யாழ்.மாவட்ட அணி கம்பஹா மாவட்ட அணியினைத் தோற்கடித்து, அரையிறுதி போட்டியில் கலந்து கொண்டிருந்த பொழுது தோற்றுப் போன அம்பாந்தோட்டை அணியினர்,
மீண்டும் மைதானத்திற்குள் நுழைந்து விளையாடிக் கொண்டிருந்த யாழ்.இளைஞர்களை இழுத்து கீழே விழுத்தி விட்டு வெளியேறுவதும், கற்களால் வீசுவதும், நிர்வாணமாக நின்று காட்டுவதுமாக அட்டகாசம் புரிந்துள்ளனர்.

இந்நிலையில் யாழ்.அணி போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
மேலும் இத்தனை அநியாயங்களும் தாங்கள் ஜனாதிபதியின் ஊரைச் சேர்ந்தவர்கள், என்ற தொனியிலேயே செய்யப்பட்டதாக யாழ்.இளைஞர்கள் கூறியுள்ளதுடன், நடுவர்களும் குறித்த காடையர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.


0 கருத்துக்கள் :