போரில் தோற்க நேரிடும் என பிரபாகரன் ஒருபோதும் நினைக்கவில்லை!

21.7.14

வடக்கு போரில் தோற்க நேரிடும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருபோதும் நினைக்கவில்லை என அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு போரில் படுதோல்வியடைய நேரிடும் என பிரபாகரனோ அல்லது புலி உறுப்பினர்களோ கருதவில்லை.
போர் இடம்பெற்ற காலத்தில் நாம் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க புறநகர்ப் பகுதிகளில் வாழ்ந்து வந்தோம்.
பொதுமக்கள் பொலிஸாருக்கு உளவுத் தகவல்களை வழங்கி வந்த காரணத்தினால் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வந்தோம்.
2000மாம் ஆண்டில் இரண்டு பேர் கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக வெளிநாடு சென்றோம். 2009ம் ஆண்டில் மூன்றாவது நபர் வெளிநாட்டுக்குச் சென்றார்.
மலேசியாவில் நாம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டோம். புலிகள் இயக்கத்தை மீள இயங்கச் செய்ய இரகசியமாகத் திட்டங்களை வகுத்தோம். மலேசியாவில் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தினோம்.
இலங்கையில் சில புலி உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.  எவ்வாறெனினும் எமது எதிர்பார்ப்புக்கள் முற்று முழுதாக தோல்வியடைந்தது என தெரிவித்துள்ளனர்.
அண்மையில் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மூன்று தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களும் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில் இதனைத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :