எதிர்த்து போட்டி : சீமான் பேட்டி

20.7.14

மதுரை மேலூர் அருகே உள்ள வெள்ளரிபட்டியில் உள்ள சுங்கச்சாவடி மேற்பார்வையாளரின் கூறிய குற்றச்சாட்டின்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.  பின்னர் மதுரை ஜேஎம்-2 கோர்ட் நீதிபதி விசாரணையில், குற்றச்சாட்டில் உண்மையில்லை என தெரியவந்தது.  இதையடுத்து சீமானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி பால்பாண்டி.

இதையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்த சீமான், ’’என் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு.  புகார் தாரரே புகார் கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டார். இது என் சொந்த பிரச்சனை. இதுக்காக மக்கள் யாரும் போராடவேண்டாம்.  நானே சரி செய்துகொள்கிறேன்.  மக்கள் பிரச்சனைகளை மட்டும் தொடர்ந்து பேசுவேன். 

 2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஆளூங்கட்சி அதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடும்’’என்று தெரிவித்தவரிடம்,   ‘’பொய் வழக்கு ஏன் போடப்படுகிறது; இது அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கையா?’’என்று கேட்டதற்கு,  ’’அதுபற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை’’ என்று கூறினார்.

அவர் மேலும்,  ‘’தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவோம்.  7 நாள் திருநாளாக கொண்டாடு வோம்’’என்று தெரிவித்தார்.

 

0 கருத்துக்கள் :