நடிகர் விஜய்க்கு எதிராக லண்டனில் கருப்பு கொடி ஈழத்தமிழர்கள் முடிவு?

14.7.14

விஜய் நடிக்கும் கத்தி படத்தின் தயாரிப்பாளரான லைகா மொபைல் அல்லி ராஜா சுபாஸ்கரன், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பர்.


இந்தநிலையில் அல்லிராஜா சுபாஸ்கரனின் குடும்ப விழாவில் கலந்து கொள்ள விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சமந்தா உட்பட கத்தி படத்தின் முக்கிய கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் லண்டன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது.


இந்த செய்தி இலங்கை தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ளது. குறிப்பாக லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் விஜய் லண்டன் வந்தால் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டவும் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


இதனிடையே திங்கள்கிழமை, கத்தி படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய், செவ்வாய்க்கிழமை லண்டன் செல்கிறார். அங்கு 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளார். வழக்கமாக லண்டன் சென்றால், தன் மனைவி சங்கீதாவின் வீட்டில்தான் தங்குவார். இம்முறை அங்கு தங்காமல் அதிக பாதுகாப்பு கொண்ட ஹோட்டலில் தங்க இருப்பதாக கூறப்படுகிறது.

0 கருத்துக்கள் :