டக்ளஸ், கருணா, பிள்ளையான் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்படலாம்?

13.7.14

பொதுமக்களால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் முரளிதரன் மற்றும் கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆகியோர் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விளக்கமளிக்க அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் ஆங்கில இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
குறித்த மூவருக்கும் எதிராக காணாமல் போனோர் ஆணைக்குழுவின் முன்னால் பலரும் சாட்சியமளித்துள்ளனர்.

இதன்போது டக்ளஸ், கருணா மற்றும் பிள்ளையானுக்கு தமது பிள்ளைகளின் கடத்தலில் தொடர்பு இருப்பதாக சாட்சியங்கள் அளிக்கப்பட்டன.

இதனையடுத்தே ஆணைக்குழு, அவர்களை விளக்கமளிக்க அழைக்கவுள்ளதாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :