புலிகளின் சிரேஷ்ட தலைவர் ரமேஸின் மனைவிக்கு தென்னாபிரிக்காவில் புகலிடம்!

12.7.14

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஸின் மனைவிக்கு தென்னாபிரிக்கா புகலிடம் வழங்கியுள்ளது. வத்சலாதேவி என்பவருக்கு இவ்வாறு தென்னாபிரிக்க அரசாங்கம் அரசியல் புகலிடம் வழங்கியுள்ளது.

வத்சலாதேவி, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளது. இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவிக்கு பிரான்ஸ் அரசியல் புகலிடம் வழங்கியுள்ளது என சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தென்னாபிரிக்கா இலங்கை நல்லிணக்க முனைப்புக்களில் ஒத்துழைப்பு வழங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் சிங்களப் பத்திரிகையில் இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துக்கள் :