பண்டாரநாயக்கவுக்கு நேர்ந்த கதியே ராஜபக்சவுக்கும் நேரும் என அமைச்சர்கள் கூறுகின்றனர்!- அசாத் சாலி

10.7.14

அரசாங்கம் தனது பயன்பாட்டுக்காக உருவாக்கிய காவி போர்த்திய நபர் அரசாங்கத்தை முந்தி சென்றுள்ளதாகவும் பண்டாரநாயக்கவுக்கு நேர்ந்த கதியே ராஜபக்ஷவுக்கும் நேரும் எனவும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

காவி அணிந்த ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க உயிரிழந்தார் என்பதை நினைவூட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கும், பொலிஸ் மா அதிபருக்கும் அப சரணம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை என்பதால், ஞானசார இன்னும் கைது செய்யப்படவில்லை.
அப சரணம் என்றால் அழிவு என்பதாகும் என தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது. மாடுகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கும் அப சரணம் என்றே கூறுவார்கள்.

இதனால் மத தலைவர் ஒருவர் அப சரணம் என்று கூறுவதை தகுதியானது அல்ல என பௌத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர், அனுர சேனாநாயக்க, அரசாங்கத்தின் செயலாளர்கள் இந்த செய்தியை அறியவில்லை என்பதன் காரணமாக ஞானசார கைது செய்யப்படுவது தாமதமாகியுள்ளது.
நாட்டை அழிக்க வந்துள்ள நபரை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் கேள்வி எழுப்ப வேண்டும். அரசாங்கத்திடம் இருந்து மக்களுக்கு கிடைக்கும் பிரயோசனம் பற்றி தேடி பார்க்க வேண்டும்.

சிறிய கருத்துக்களை வெளியிட எங்களையும் தமிழர்களை கைது செய்த அரசாங்கத்திற்கு பாரதூரமான கருத்தை வெளியிட்ட ஞானசாரவை ஏன் கைது செய்யவில்லை?.
அதேவேளை பௌத்த பிக்குகளை அளுத்கம நகருக்கு அழைத்துச் சென்ற எஸ்.எஸ்.பி ரணகல கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிவாசலுக்கு வந்து என்னை பற்றி விசாரித்துள்ளார்.
எமக்கு எந்த இனவாத மோதல்களை ஏற்படுத்தும் தேவையில்லை. நான் அப்படி செய்திருந்தால் என்னை கைது செய்ய அரசாங்கத்திற்கு எந்த தடையுமில்லை.
அளுத்கம சம்பவங்ளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுமாறே நாங்கள் கோருகிறோம்.
நாங்கள் வழங்கிய கடிதத்திற்கு அரசாங்கம் பதில் நடவடிக்கை எடுத்திருந்தால், பிரச்சினை இந்தளவு தூரத்திற்கு சென்றிருக்காது.
மோதலை நிறுத்த தலையிடுமாறு நாங்கள் பிற்பகல் ஒரு மணிக்கு பொலிஸ் மா அதிபருக்கு நாங்கள் கடிதம் வழங்கினோம்.

அசாத் சாலி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் வழங்கியதன் காரணமாவே மோதல் ஏற்பட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

அளுத்கம சம்பவம் 6 மணியளவில் ஏற்பட்டது. இந்த குறுகிய நேரத்pல் எந்த கடிதம் பத்திரிகைகளில் வெளிவர சந்தர்ப்பம் இல்லை.

2002 ம் ஆண்டு முதல் என்னிடம் இருக்கும் துப்பாக்கிக்கு இந்த வருடத்திற்கான அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதில், சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடும் உயிராப்பது இருக்கும் எனக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கி அனுமதிப் பத்திரத்தை  எஸ்.எஸ்.பி. ரணகல கடந்த ஜனவரி மாதம் முதல் தன்னிடம் தடுத்து வைத்துள்ளார்.

அரசாங்கம் என்னை கொலை செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் திட்டமிட்டு வருகிறது. இதற்கு ரணகல பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :