பிக்குவுக்கு 70 ஆண்டுகள் சிறைத்தண்டனை

3.7.14

நான்கு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட  பெளத்த பிக்கு ஒருவருக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி அமால் திலகரட்ண 70 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளார்.

 2004 ஜனவரி முதலாம் திகதிக்கும் பெப்ரவரி 14 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சிலாபம் நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து இந்தக் குற்றத்தைப் புரிந்தார் என பிக்கு மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

 குற்றத்தை பிக்கு ஒப்புக் கொண்டமையை அடுத்து அவருக்குச் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு 52 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 4 லட்சத்து 2 ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாகச் செலுத்தும்படியும் அதைச் செலுத்தத் தவறின் மேலும் 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

0 கருத்துக்கள் :