220 கி.கி.தங்கத்துக்கு என்ன நடந்தது?சரத் பொன்சேகா

19.7.14

இராணுவத் தளபதியாக தான் இருந்த போது மீட்டெடுக்கப்பட்டு அரசாங்கத்திடம் கையளித்த தங்கத்துக்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இரு பெட்டிகளில் தங்க ஆபரணங்களை நாங்கள் கையளித்திருந்தோம். நாங்கள் மீட்டெடுத்து ஒப்படைத்த 220 கிலோ கிராம் தங்கத்திற்கு என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியாது. பின்னர் பசில் ராஜபக்ஷவிடம் இது பற்றி கேட்கப்பட்ட போது, 110 கிலோ கிராம் மீட்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார். சரி அரைவாசித் தொகையாகும் என்று ஆங்கில ஊடகமொன்றுக்கு கடந்த வியாழக்கிழமை (17 ஜூலை 2014) அளித்த பேட்டியில் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அந்தத் தங்கத்துக்கு என்ன நடந்தது என்பதை இப்போது நாம் அறியோம். உரிமையாளர்களின் பெயர்களுடன் தங்கப் பொதிகள் இருந்தன. விடுதலைப் புலிகளின் வங்கியில் தங்கத்தை அதிகளவான தமிழ் மக்கள் வைப்புச் செய்திருந்தனர். அநேகமானவை மக்களின் ஆபரணங்களாகும். உரிமையாளர்களுக்கு மிக இலகுவாக அரசாங்கத்தால் அவற்றை திரும்ப வழங்க முடியும். அந்தத் தங்கம் திரும்ப கொடுக்கப்படுமென நான் நினைக்கவில்லை.

தங்கத்தை அரசாங்கம் திரும் பக் கொடுத்திருந்தால் பட்டியலை வெளியிட்டு நாங்கள் திரும்பக் கொடுத்து விட்டோமென கூறமுடியுமென சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :