153 அகதிகள் இலங்கை கடற்படையினரிடம் கையளிப்பு: கடற்படையினர் நிராகரிப்பு

1.7.14

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து கோரிச் சென்ற 153 அகதிகளும் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் - கிறிஸ்மஸ்தீவில் உள்ள அகதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி த கார்டியன் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த படகு குறித்த எந்த ஒரு தகவலும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை.
இதனை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எனினும் இதனை இலங்கை கடற்படை மறுத்துள்ளதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அகதி அந்தஸ்த்து கோரி வருகின்றவர்களை விசாரணைகள் இன்றி நடுக்கடலில் வைத்து திருப்பி அனுப்புகின்றமையும், அந்த அகதிகள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே அவர்களை திருப்பி அனுப்புகின்றமையும் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று த கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.

0 கருத்துக்கள் :