சிறிலங்கா அரசாங்கத்துக்கும், பொதுபல சேனாவுக்கும் எதிராக கிளர்ந்தெழுந்த முஸ்லிம்கள்

19.6.14

முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனாவின் வன்முறைகளைக் கண்டித்தும், முஸ்லிம்களை மீதான வன்முறைகளைத் தடுக்கத் தவறிய சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டித்தும், பேருவெலவிலும், கொழும்பிலும் முஸ்லிம்கள் நேற்று போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
நேற்றுக்காலை அளுத்கம, பேருவெல பகுதியில் நடைமுறையில் இருந்த ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதும், தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற அதிகாரிகள் நிர்ப்பந்தித்தனர்.
இதையடுத்து, தமது வீடுகள் அழிக்கப்பட்டு விட்ட நிலையிலும், பாதுகாப்பற்ற நிலையிலும் வீடுகளுக்குத் திரும்ப முடியாது என்று கூறி, முகாம்களிலுள்ள முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் அரசாங்கத்துக்கும், பொதுபல சேனாவுக்கும் எதிராக ஆவேசமாக போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.
அதேவேளை, கொழும்பிலும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. 

0 கருத்துக்கள் :