இலங்கையில் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு (படங்கள் )

10.6.14

இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று வலியுறுத்தி கொழும்பில் இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய பிரதமர் நரோந்திரமோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று எச்சரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப் பட்டன.

கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரித்தனர்.

0 கருத்துக்கள் :