கத்திக்குத்தில் இளைஞர் மரணம்

11.6.14

பளை, தம்பகாமம் பகுதியில் புதன்கிழமை (11) காலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் கத்திக் குத்துக்கு இலக்காகி அதேயிடத்தைச் சேர்ந்த முத்தையா திலீபன் (வயது 30) என்பவர் மரணமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, படுகாயமடைந்த ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்; பொலிஸார் கூறினர்.
இதேவேளை, இக்கத்திக் குத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் படுகாயமடைந்த நபருடன்; மற்றுமொருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மரணமடைந்த நபருக்கும் படுகாயமடைந்த நபருக்குமிடையில் பணக் கொடுக்கல், வாங்கல் விடயத்திலிருந்த பிரச்சினை இரு குழுக்களுக்கிடையிலான கைகலப்பாக மாறி கத்திக்குத்து இடம்பெற்றதென்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

0 கருத்துக்கள் :