போலிக் கடவுச்சீட்டு வைத்திருந்த இலங்கையர் அறுவர் கைது

23.6.14


போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்ததாக கூறப்படும் சென்னையில் வசிக்கும் ஆறு இலங்கையரை சென்னை பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

போலி பிரயாணப் பத்திரங்களை விநியோகித்தவருக்காக காத்திருந்த போதே மேற்படி அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்குழுவானது கடவுச்சீட்டுகளுக்கு தலா 30,000 ரூ வீதம் செலுத்தியுள்ளதாகவும் இவ்வாறாக வெளிநாட்டுக்கு சென்றவர்கள் இக்கடவுச்சீட்டையே பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அது போன்ற போலி வீசாக்களும் இலங்கையில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கலாம் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஏற்கெனவே இதே குற்றத்தினால் சிறைத்தண்டனை பெற்றவர்களாவர்.
இவ்வாறான போலிக்கடவுச்சீட்டை பிரயோகித்து வெளிநாடுக்கு செல்ல முயற்சித்ததினால் இதற்கான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :