யாழில் பள்ளிவாசல் மீது தாக்குதல்

21.6.14

யாழ். நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள கமால் பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை 1 மணியளவில் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது பள்ளிவாசல் யன்னல் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. அளுத்தம, பேருவளை, தர்கா போன்ற பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இணைந்து நேற்றுக்காலை யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கண்டனப்போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்ததோடு இதில் பெருமளவான முஸ்லிம்களும் பங்கு கொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.இந்நிலையிலேயே பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :