மக்களால் நிராகரிக்கப்பட்ட கொலைகாரர் மகிந்தரின் பிரதிநிதியானார்

11.6.14

கடந்த முறை அம்பாறை மக்கலால் நிராகரிக்கப்பட்ட கருணா பிள்ளையானின் வளி வந்த மகிந்தரின் சகா இனிய பாரதி மாகாண சபையில் சத்தியப்பிரமாணம் செய்ததை அடுத்து கிழக்கு மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர் அடுத்து என்ன கொலை நடக்குமோ என்ன பீதி சகலரிடமும் உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பிரான இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக, கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார். அவரது வெற்றிடத்திற்கே இனியபாரதி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துக்கள் :