பாணந்துறையில் முஸ்லிம்களின் ஆடைக் காட்சியறை தீக்கிரை

21.6.14

பாணந்துறையில் ஆடை வர்த்தக நிறுவனம் ஒன்று இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை மருத்துவமனைக்கு அண்மையாக உள்ள நோலிமிட் ஆடைக் காட்சியறையே தீக்கிரையாக்கப்பட்டது.
பெற்றோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இது மின்கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளத,
இன்று அதிகாலை 3 மணியளவில் பற்றிய தீயை அணைக்க, 5 தீயணைப்பு வண்டிகள் முயற்சிகளை மேற்கொண்ட போதும், ஆடைக்காட்சியறை முற்றிலும் எரிந்து நாசமாகியது.
இது முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்பதும், அண்மைக்காலத்தில் நோமிலிட் காட்சியறைகளைக் குறிவைத்து பௌத்த அடிப்படைவாத பொது பலசேனா, இராவண பலய போன்ற அமைப்புகள் தாக்குதல்களை நடத்தியிருந்தன.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வரும் நிலையில், பாணந்துரையில் ஆடை காட்சியறை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா காவல்துறை மற்றும், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று காலை சென்று பார்வையிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :