திருச்சி முகாமில் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்

12.6.14திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் 3 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இவ் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இதில் தேவரூபன் (27), கேதீஸ்வரன் ( 33), புருசோத்தமன் (29) ஆகிய மூவருமே திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் கடல்வழியாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக சிறப்பு முகாமில் அடைத்த வைக்கப்பட்டுள்ளனர்.

கூலி வேலைகளுக்கு சென்றே இவர்கள் தங்களது குடும்பங்களை பார்த்து வந்தார்கள். தற்போது இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் தங்களின் குடும்பங்கள் இவ்வாறு வாழ வழியின்றி இருப்பதனாலேயே விடுதலையை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டத்தினை நடத்துவதாக உண்ணாவிரதம் இருப்பவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

0 கருத்துக்கள் :