அன்று..! புலிகளின் தலைவரை கைது செய்தது யார்??

11.6.14

அந்தப் புகைப்படம்தான்… நீங்கள் இங்கே காண்கின்ற அரியபுகைப்படம் ஆகும்!

இன்று அந்த கான்ஸ்டபிள் மாணிக்கம் அவர்கள், நமது தேசியத் தலைவர் அவர்களின் கரங்களில் விலங்கினை மாட்டி அழைத்துச் செல்கின்ற காட்சியினை இந்தப் புகைப்படம் ஊடாகப் பார்க்கும் போது அவரின் மனநிலை எவ்வாறு இருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களும், புளொட் இயக்க தலைவர் உமாமகேஸ்வரனும் சென்னை பாண்டி பஜாரில் பொதுமக்கள் நடமாடிய ஒரு தினத்தில் பரஸ்பரம் சுட்டுக் கொண்டனர்.
இச் சம்பவம் 1982 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி இது இடம்பெற்றது.
இதற்கு முன்பாகவே இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் முற்றிப் போய் காணப்பட்டது. இத்துப்பாக்கிச் சூட்டுச் சண்டைக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஜனவரி 1982. 02 ஆம் திகதி புளொட் இயக்க முக்கியஸ்தர் சுந்தரம் சுட்டுக் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் சீலன் என்பவரால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று நம்பப்படுகின்றது. சுந்தரம் புளொட் இயக்கத்தின் புதிய பாதை என்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். வலது கரம். விடுதலைப் புலிகளின் அடுத்த பார்வை அவர் மீதுதான் திரும்பும் என்று சுந்தரம் படுகொலையை அடுத்து உணர்ந்து கொண்டார் உமாமகேஸ்வரன். அவசரமாக கிளம்பி படகு மூலம் தமிழகம் வந்து சேர்ந்தார்.
சென்னை பாண்டி பஜாரில் உள்ள உணவகத்துக்கு உமாமகேஸ்வரனும், அவரது இயக்கத்தை சேர்ந்த கண்ணன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்திருந்தனர்.
சாப்பிட்டு விட்டு வெளியே வந்த இருவரும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை நெருங்கினர். தலைவர் பிரபாகரன் அவர்கள் அங்கு நிற்கின்றமையை கவனித்து விட்டார் உமாமகேஸ்வரன்.
தலைவர் பிரபாகரன் அவர்களுடன் அவரது இயக்கத்தை சேர்ந்த ராகவன் என்பவரும் நின்று இருந்தார். இதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன் சென்னை மவுண்ட் ரோட்டில் (தற்போதைய அண்ணா சாலையில்) உள்ள தியேட்டர் ஒன்றுக்கு வெளியே வைத்து உமா மகேஸ்வரனை சுட பிரபாகரன் அவர்கள் முயற்சித்தார் என்றும் உமா மகேஸ்வரன் தப்பித்து விட்டார் என்றும் ஒரு தகவல் உள்ளது.
பாண்டி பஜாரில் தலைவர் பிரபாகரன் அவர்களை கண்டமையுடன் உஷார் அடைந்தார் உமா மகேஸ்வரன். சூடு நடத்து கின்றமைக்கு தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்க கூடாது என தீர்மானித்துச் சொந்தத் துப்பாக்கியை உருவினார் உமா மகேஸ்வரன். கிட்டத்தட்ட அதே எண்ண ஓட்டத்துடன் அதே கணத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களும் துப்பாக்கியை உருவினார்.
கைத்துப்பாக்கியால் ஆறு தடவைகள் சுட்டார் பிரபாகரன் அவர்கள். ஆனால் உமா மகேஸ்வரன் காயம் எதுவும் இன்றி தப்பித்துக் கொண்டார். உமா மகேஸ்வரனுடன் வந்திருந்த கண்ணன் மீது துப்பாக்கி சூடு பட்டு இரத்தம் வழிந்தது.
பிரபாகரன் அவர்களின் தோட்டாக்கள் தீர்ந்து விட்டன. மேற்கொண்டு சுட முடியவில்லை. ஆனால் உமா மகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டமையில் இருந்து பிரபாகரன் அவர்கள் தப்பிக் கொண்டார்.
சம்பவ இடத்தில் இருந்து உமா மகேஸ்வரன் விரைவில் தப்பிச் சென்று விட்டார். துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சி அடைந்து இருந்த மக்களின் கவனம் பிரபாகரன் அவர்கள் மீதும் ராகவன் மீதும் படிந்தது. மக்கள் இவர்களை பிடிக்க வர பிரபாகரன் அவர்களும், ராகவனும் பாண்டி பஜாரில் இருந்து வேகமாக மறையத் தொடங்கினார்கள்.
பொதுமக்கள் துரத்திச் செல்ல பாண்டிபஜார் வீதியில் ஓடிய பிரபாகரன் அவர்களை எதிரே வந்த ஒருவர் மடக்கிப் பிடித்தார். தமிழக காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அவர். பெயர் மாணிக்கம். மாம்பலம் பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்தவர்.
சம்பவ நேரம் பர்மா பஜாரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த மாணிக்கம் பொதுமக்களின் துணையுடன் தலைவர் பிரபாகரனன் அவர்களையும் ராகவனையும் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கண்ணனையும், மாம்பலம் பொலிஸ் கைது செய்தது.

0 கருத்துக்கள் :