அம்பாறை, ஆலையடிவேம்பு இராணுவ முகாமில் புலிகளின் முன்னாள் தளபதி ராம்!

6.6.14

காணாமல் போய்விட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதிகளுள் ஒருவரான ராம், தற்போது விடுவிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆலையடிவேம்பு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அவர், தற்போது விடுதலைப் புலிகளது முன்னாள் போராளிகளை சந்தித்து தனது இயலாமையை எடுத்துக் கூறியுள்ளதுடன், கிழக்கை கல்வி ரீதியினில் மேம்படுத்த பங்கெடுக்க அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது.

தொடர்ந்தும் படையினரது கண்காணிப்பின் கீழேயே அவர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது பயணத்தின் போதெல்லாம் அவர்களும் இணைந்து வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையிலேயே வெலிகந்த புனர்வாழ்வு முகாமிலிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு ராம் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :