கனடா மொன்றியலை அதிர வைக்கும் வல்வெட்டித்துறை இளைஞனின் கொலை

25.6.14

கனடா மொன்றியலில் நேற்று மாலை 7745 Mountain Sights என்னும் இடத்தில் ஜெயராசன் மாணிக்கராஜா என்பவர்
அவரது வீட்டிற்கு பக்கத்தில் குத்தி கொலைசெய்யப்பட்டார் .
இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார் . அவரது நண்பர்களில் ஒருவராக உள்ள ஒரே ஊரை சேர்ந்த நபரே இக் கொலையை செய்ததாக காவல்துறையினர் சந்தகத்தின் பெயரில் 34 வயது இளைனனை கைது செய்துள்ளார்கள் .
ஜெயராசன் மாணிக்கராஜா அவர்கள் மொன்றியலில் 2000 ஆம் ஆண்டு குடிபெயர்ந்தததிலிருந்து ஒரு சிறந்த சமூக சேவையாளரும் , கோயில் ,விளையாட்டு ஆகிய பொது நிகழ்வுகளில் நன்கு அறியப்படவருமாகும் .
3-பிள்ளைகளின் தந்தையான மாணிக்கராஜா உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அருகில் உள்ள நடைபாதையில் கிடக்க கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். கத்திக்குத்து காயங்களால் இறந்துள்ளார். உடலின் மேற்பாகம் மற்றும் கழுத்தைச்சுற்றிய பகுதிகளிலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
பொலிசார் சந்தேக நபரை அருகில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் சுற்றி வளைத்துள்ளனர். இது ஒரு மூவர் சம்பந்தப்பட்ட காதல் விவகாரமே இச்சம்பவத்திற்கு அடிப்படையாக இருக்கலாமென பொலிசார் நம்புவதாக கருதப்படுகின்றது.
தனது தந்தையை மனிதன் கட்டிடத்தின் வெளியே பள்ளம் ஒன்றிற்கு இழுத்து வந்ததை கவனித்ததாக பாதிக்கப்பட்டவரின் மகன் அபிசாத் மாணிக்கராஜா மொன்றியல் சிரிவியில் கூறியுள்ளார்.
மாணிக்கராஜாவும் சந்தேக நபரும் இலங்கைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் சிறிலங்காவில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களென பாதிக்கப்பட்டவரின் சகோதரரின் கூற்றுப்படி தெரியவந்துள்ளது.
இறந்தவர் கனடாவிற்கு வந்த போது சமூக சேவைகள் செய்துவந்தார். தற்போதும் கோயில் விளையாட்டு போன்றன வற்றில் தொண்டர் சேவை செய்து வந்துள்ளார். அதனால் தான் ஏராளமான மக்கள் அழுகின்றனர் என பாதிக்கப்பட்டவரின் சகோதரர் சிபகணேஷ் மாணிக்கராஜா கூறினார்.
இவருக்கு முறையே 18-வயது, 16-வயது மற்றும் 10-வயதில் 3- பிள்ளைகள் உள்ளனர். மாணிக்கராஜா 2000-ஆண்டு அகதியாக கனடா வந்தவர். தனது தந்தை ஒரு நட்பு ரீதியானவர் என அவரது மகளான திவ்யபிரியா தெரிவித்துள்ளார்.
இரண்டு தொடர்மாடி கட்டிடத்திற்கிடையில் உள்ள நடைபாதையில் திங்கள்கிழமை இரவு கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். சந்தேக நபர் சிறிலங்காவில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவரென்றும் ஒரே தொடர்மாடிக்கட்டிடத்தில் அயலவர் என்றும் தெரியவந்துள்ளது.
எனது தாய் பல்கனியில் நின்ற போது எனது தந்தை எங்கள் கட்டிடதிற்குள் நுழைந்ததாகவும் அப்போது சந்தேக நபர் வந்து தந்தையுடன் கதைக்க வேண்டும் என கூறியதாகவும் பின்னர் தனது கையை மாணிக்கராஜாவின் தோளின் மேல் போட்ட வண்ணம் சந்திற்குள் கூட்டிச்சென்றதை தாயார் கண்டதாகவும் பாதிக்கப்பட்டவரின் மகளான திவ்யபிரியா கூறியுள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர் அவர் தனது சொந்த தொடர்மாடிக்கட்டிடத்தின் படிக்கட்டில் இரத்தம் படிந்த கைகளுடன் இருந்து கொண்டு சாதாரணமாக ‘நான் அவரை குத்திவிட்டேன். நடைபாதையில் உள்ளார். போய் அவரை எடுங்கள்’. என கூறியதாக சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.
செய்தியை கேள்விப்பட்ட உடன் மாணிக்கராஜாவின் மனைவி கமலாம்பிகை ஜெயராசன் இருவரும் சென்ற வழியில் ஓடிச்சென்றுள்ளார். அங்கே ஒரு குப்பைத்தொட்டிக்கு பின்னால் இரத்த வெள்ளத்தில் தனது கணவர் கிடந்ததை கண்டுள்ளார் என அவரின் மகள் தெரிவித்துள்ளார்.
911-ற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவ்விடத்திற்கு வந்த அவசர மருத்துவ சேவையினர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு விரைந்துள்ளனர். செவ்வாய் கிழமை வைத்தியசாலையில் இறந்துள்ளார்.
34-வயதுடைய சந்தேக நபருக்கு 5-வயதுடைய குழந்தை ஒன்று உள்ளது. இவர் அமைதியானவரென அயலவர்கள் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் மொன்றியலில் 2014-ல் இடம்பெற்றுள்ள 13-வது கொலை சம்பவம் எனவும் கொலை குற்ற புலன்விசாரனையாளர்கள் இவரை விசாரித்ததாகவும் இந்த வார இறுதியில் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது

0 கருத்துக்கள் :