மூழ்கும் தருவாயில் அகதிப் படகு குறித்து தமிழ்ப்பெண் தகவல்

28.6.14

கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் அடங்கிய படகொன்று மூழ்கும் தருவாயில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியான போதிலும்இ மத்திய அரசாங்கம் ஊர்ஜிதம் செய்ய மறுக்கிறது.

இந்தப் படகிலுள்ளதாகக் கூறப்படும் 153 பேரில் இருவரிடம் பேசியதாக ஊடக நிறுவனம் அறிவித்துள்ளது.

இவர்களில் ஒருவர் தமிழ்ப் பெண்ணாக இனங்காணப்பட்டுள்ளார். தாம் வந்த படகு ஜூன் 13ஆம் திகதி
தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டதாக அவர் கூறினார்.

இது குறித்து குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில் கடலில் உயிர்ப்
 பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தலாக அமையக்கூடிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளையே அரசாங்கம் ஊர்ஜிதம்
 செய்யுமெனத் தெரிவித்தார்.

மேலும் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள படகு பற்றி அரசாங்கத்திடம் தகவல் எதுவுமில்லையென அவர் கூறினார்.

0 கருத்துக்கள் :