கறுப்பு ஜூலையைத் தடுக்கத் தவறிவிட்டோம் – ஒப்புக்கொண்டார் ரணில்

27.6.14

1983ம் ஜூலை இனக்கலவரத்தைத் தடுக்க ஐதேக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என்று ஒப்புக்கொண்டுள்ளார் ஐதேகவின் இப்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

 நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், மதத் தலைவர்கள், மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“1983ம் ஜூலை இனக்கலவரத்தைத் தடுக்க எமது ஐதேக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது.

அது தவறு மீளவும் நடக்கக் கூடாது. இப்போதைய ஆட்சியாளர்கள் அந்த தவறை செய்யக் கூடாது.
அளுத்கம, பேருவளை கலவரங்கள் முடிவுக்கு வந்துள்ள போதிலும், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு இடையிலான பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை.

அரசாங்கம் அதனைக் கவனத்தில் கொண்டு தீர்க்க முனைய வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :