அமெரிக்கத் தலைவர்களை தூக்கில் போட வேண்டும்! எஸ்.பி திஸ்ஸநாயக்கா

24.6.14

அமெரிக்கத் தலைவர்களை தூக்கில் போட வேண்டுமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கத் தலைவர்கள் மேற்கொண்ட குற்றச் செயல்களுக்கு அவர்களை தூக்கிலிட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்;.
கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
லிபியா, ஈராக் ஆகிய நாடுகளில் அமெரிக்கா தலையீடு செய்து நாட்டு தலைவர்களை கொல்லும் வரையில் நாடுகள் சிறந்த முறையில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈராக்கிய தலைவர் சதாம் ஹூசெய்ன் சில தவறுகளை விட்டிருக்கலாம் என்ற போதிலும் நாட்டில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார் எனத் தெரிவித்துள்ளார்.
லிபிய அதிபர் முஹம்மர் கடாபி உயிரிழந்ததன் பின்னரே நாடு யுத்த வலயமாக மாற்றமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஊடாக இலங்கையின் உள் விவகாரங்களில் தலையீடு செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், இலங்கை அரசாங்கம் இந்த முயற்சிக்கு அனுமதியளிக்காது என திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :