பன்னல பள்ளிவாசல் கடைகள் மீது தாக்குதல்

23.6.14

குரு­நாகல், கொக்­க­ரெல்ல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பன்­னல பள்­ளி­வாசல் மீதும் இப்­பா­க­முவ, தெகல்­க­முவ பகு­தி­க­ளி­லுள்ள கடைகள் மீதும் மது­போ­தையில் வந்த குழு­வி­னரால் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இதனால் அப்­ப­கு­தியில் பெரும் பதற்றம் நில­வி­யது. சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, குரு­நாகல் பன்­னல பகு­தியில் வீதி­யோரம் உள்ள பள்­ளி­வாசல் மீது மது போதையில் வந்த சுமார் 15 பேர் கல்­வீச்சு தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்­ளனர். இதனால் பள்­ளி­வா­சலின் முன்­பக்க கண்­ணா­டிகள் கடும் சேதத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளன.


அத­னை­ய­டுத்து அங்­கி­ருந்து தப்பிச் சென்ற குறித்த குழு­வினர் குரு­ணாகல் தம்­புள்ளை பிர­தான வீதியில் இப்­பா­க­முவ சந்­தியில் உள்ள கடை தொகு­தி­யி­லுள்ள முஸ்லிம் கடை­களை உடன் மூடு­மாறு கூச்­ச­லிட்­டுள்­ளனர். இதன் போது அந்த பகு­தியில் சிவில் உடை­யி­லி­ருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் ஏன் கடை­களை மூட­வேண்டும் என குறித்த குழு­வி­ன­ரிடம் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து அக்­கு­ழு­வினர் மேலும் கூச்­ச­லிட்ட வண்ணம் கடைகள் மீது கற்கள் மற்றும் பொல்­லு­களால் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். இதனால் கடை­களின் முன்­பக்க கண்­ணா­டி­க­ளுக்கு கடும் சேதம் ஏற்­பட்­டது. இதனைத் தொடாந்து அப்­ப­கு­தியில் உள்ள முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் அனைத்தும் மூடப்­பட்­டன.

சம்­ப­வத்தை அடுத்து பிர­தேச வாழ் முஸ்­லிம்கள் பெரும் அச்­சத்­துக்கு உள்­ளா­கி­ய­துடன் அப்­பி­ர­தே­ச­மெங்கும் பெரும் பதற்றம் ஏற்­பட்­டது. அத­னை­ய­டுத்து கொக­க­ரெல்ல பொலிஸார் சம்­பவ இடத்­திற்கு விரைந்­த­துடன் வடமேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் றிஸ்வி ஜவ­ஹர்ஷா மற்றும் இப்­பா­க­முவ பிர­தேச சபை தவி­சாளர் டீ.ஜே.சுமித் ஆகி­யோரும் ஸ்தலத்­துக்கு சென்று பதற்ற நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வரும் வித­மாக பொலி­ஸா­ருடன் கலந்­து­ரை­யா­டினர்.

எவ்­வா­றா­யினும் பள்­ளி­வாசல் மற்றும் கடை தொகுதி மீது தாக்­குதல் மேற்­கொண்ட சந்­தேக நபர்­களை அடை­யாளம் காட்ட தாம் தயார் என பிர­தேச மக்கள் தெரி­வித்­தனர். தமது ஊரினை அண்­மித்த பகு­தி­களில் வசிக்கும் பெரும்­பான்­மை­யி­னத்தைச் சேர்ந்­த­வர்­களே இந்த தாக்­கு­தலை நடத்­தி­ய­தா­கவும் அவர்கள் குறிப்­பிட்­டனர்.

இந் நிலையில் அமைச்சர் ரவூப் ஹக்கிம் குரு­நாகல் மாவட்­ட­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமா­ர­வுடன் தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்­தினார். அத­னைத்­தொ­டர்ந்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமா­ரவின் உத்­த­ரவின் பேரில் விஷேட பொலிஸ் குழு ஸ்தலத்­துக்கு சென்று விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது. அத்­துடன் சந்­தேக நபர்­களை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் நிலைமை ப+ரண­மாக கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தையடுத்து குரநாகல் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இச்செய்தி அச்சுக்கு போகும் வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :