பிரபாகரன் இருந்தால் முஸ்லிம்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது- அஸ்மின்

21.6.14


முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக மக்கள் முன்னணி தகவல் தொடர்பு மையம் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.உறுப்பினர்கள் கண்டனக் குரல்களை எழுப்பியிருந்தனர்.

அமைச்சர் ஜங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு பேராட்டத்தில் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டிருந்ததுடன் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒன்றுபட்ட செயற்பாட்டினூடாகவே இலங்கையில் அமைதியும் உரிமையுடன் கூடிய வாழ்வு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாத்தியப்படும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இங்கு கண்டனக் குரலை வெளியிட்ட வடமகாணசபை உறுப்பினர் அஸ்மின்
எமக்குள் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் இருந்தாலும் மனிதர்கள் என்ற புள்ளியிலே நாம் இன்று ஒன்றாகி இருக்கின்றோம்.இந்த தமிழ் சகோதரர்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இது நல்ல முன்னுதாரணம் தமிழர்களின் போராட்டம் இன்றுவரை நின்று நிலைக்கின்ற தென்றால் அதற்கு ஒரு நியாயம் இருந்தது என்பதை நான் இங்கு கூற விரும்புகின்றேன்.நான் வன்முறைகள் நடந்த தர்க்கா நகர் பேருவளைக்கு சென்ற போது அங்கு முஸ்லிம் தாய் என்னை பார்த்து கேட்டார் பிரபாகரன் எங்கே என்று கேட்டார் .நான் அவரை பார்த்து ஏன் என்று கேட்டேன் அதற்கு அந்த முஸ்லிம் தாய் சொன்னார் பிரபாகரன் இருந்திருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை நேர்ந்திருக்காது என்று அஸ்மின் உணர்ச்சி பொங்கக் கூறினார்.

முஸ்லிம்களின் பொறுமையை சோதிக்கக்கூடாது- எம்.எம்.நிவாகீர்
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட தகவல் வழிகாட்டல் மையத்தின் செயலாளர் நிவாகீர் கருத்து வெளியிடுகையில்
எமது மக்களுக்கு எதிராக அரச கைக்கூலிப்படைகளின் அனுசரணையோடு பொது பல சேனா அரங்கேற்றிய காடைத்தனங்களால்.எமது உயிர் உடமைகள் பொருளாதாரம் அழிக்கப்பட்டிருக்கின்றது.
இத்தகைய கொடுமைகள் அரசாங்கத்தின் துணையோடுதான் நடத்தப்பட்டிருக்கின்றது. குற்றவாளியான பொது பலசேனாவின் ஞானசார தேரரை இன்னும் கைது செய்யவில்லை. உடனடியாக அவர் கைது செய்யப்பட வேண்டும். முஸ்லிம் சமுதாயம் எப்போதும் பொறுமை காக்காது. நாம் பொறுமை இழந்தால் தாங்கமாட்டீர்கள். நாம் எமது உயிரை அல்லாவின் பாதத்தில் எப்போதும் கொடுக்க தயங்காதவர்கள். எமக்கு ஒரு புனிதமான மார்க்கம் உண்டு. அதன் படிதான் நாம் ஒழுகுகின்றோம். எனவே எமது பொருளாதாரத்தை வாழ்க்கையை சீரழிப்பதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.

வடக்கு கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு தீர்வை நோக்கி செல்வதே ஒரே வழி-பா.உறுப்பினர் சி.சிறீதரன்
அன்று 56களில் சிங்கள காவல்துறை பார்த்திருக்க சிங்கள காடையர்களால் பெரும் வன்முறைகள் நடத்தப்பட்டதோ இன்று அது முஸ்லிம்கள் மீது அரங்கேற்றப்பட்டுள்ளது.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக இணைந்து வடக்குக் கிழக்கில் ஒரு தீர்விற்காக பயணிக்க வேண்டிய காலத்தை சிங்கள பேரினவாதம் எம்மிடம் தந்திருக்கின்றது. அன்று தந்தை செல்வா தன் பாசறையில் வளர்ந்த முஸ்லிம் பெரும் தலைவர் அஸ்ரப்பிடம் அம்பாறையை மையமாக வைத்து ஒரு முஸ்லிம் உலகை உருவாக்க நினைத்தார்.

இன்று அந்த நோக்கத்தின் தேவையை உணரமுடிகின்றது .மொழியால் ஒன்றுபட்ட எம்மை இலங்கையில் பௌத்த பேரினவாதம் அழித்தொழிக்க முனைகின்றது என தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :