சிறிய விடயங்களுக்கெல்லாம் கடையடைப்பு போராட்டமா?

23.6.14

அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை சிறிய விடயம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வர்ணித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட வேளையில் ஜனாதிபதி உரையாற்றி இருந்தார்.

அதன் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக யாரும் கடையடைப்பு போராட்டத்தை நடத்தவில்லை.
ஆனால் தற்போது சிறிய சிறிய விடயங்களுக்கு பாரிய கடையப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஜனாதிபதி,  அளுத்கம சம்பவத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை எடுத்துக் காட்டுவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

0 கருத்துக்கள் :