மனைவி பிள்ளைகள் என்னை வஞ்சித்தாலும் பரவாயில்லை: தேசிய ஒற்றுமைக்காக முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!

20.6.14

சிங்கள - முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான    ஒற்றுமை ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையிலும் அதனைக் கட்டியெழுப்பும் முகமாகவும் முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் செய்ய தான் விருப்பம் கொண்டுள்ளதாக   பொதுமக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 இவ்வாறு செய்வதன் மூலமே இரு இனத்தவர்களின் இரத்தங்களும் சொந்தங்களாக மாறி ஐக்கியத்துடன் வாழ முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். களனியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற  கூட்டம் ஒன்றிலேயெ அவர் தனது  இந்த விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் எமது இரத்த சொந்தங்கள், அவர்கள் எமக்கு பெண்களை மணம் முடித்து கொடுப்பதில்லை. ஆனால் சிங்கள பெண்களை மணந்துள்ளனர்.

முஸ்லிம் பெண் ஒருவரைத்  திருமணம் செய்து கொள்வதால் எனது மனைவி மற்றும் பிள்ளைகள் என்னை  வங்சித்தாலும்  பரவாயில்லை தேசிய ஒற்றுமையின் முக்கியத்துவம் கருதி நான் முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து  கொள்ள நான் பின்னிறக்கப்   போவதில்லை.

முஸ்லிம் பெண்ணை திருமணம் கொண்டால் நான் கூட  முகத்தை மூடிக் கொண்டு சண்டைக்கும் போகலாம் என்றும் அவர்  தெரிவித்தார்

0 கருத்துக்கள் :