இலங்கை பணிப்பெண்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் சவுதி பொலிஸ்

28.6.14

சவுதி அரேபியாவில் தொழில் புரிகின்ற இலங்கைப் பணிப் பெண்களை வெளித்தரபுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று சவுதி பொலிஸார் தொழில்தருனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

சவுதியில் பணியாற்றுகின்ற இலங்கை பணிப் பெண்கள்  ரமழான் மாத காலத்தில் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக ஒப்பந்த காரர்களின் வீடுகளில் இருந்து தப்பி வேறு இடங்களில் தொழிலுக்கு இணைவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாதத்தில் இவ்வாறு வேறு இடங்களில் தொழிலில் இணைவதன் மூலம் சுமார் 2000 சவுதி ரியால்கள் வரையில் ஈட்டிக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எனவே இலங்கை பணிப் பெண்களிடம் கையடக்க தொலைபேசிகளை வைத்திருக்கவோ, அல்லது அவர்களை தனியாக வீட்டில் இருந்து வெளியில் செல்லவோ அனுமதிக்க வேண்டாம் என்று பொலிஸார் கோரியுள்ளனர்.

மேலும் இவ்வாறான பெண்கள் தொடர்பில் சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கும், கடவுச் சீட்டு காரியாலயத்துக்கும் அறிவித்திருப்பதாகவும் அரேபிய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :