இலங்கை அரசு எதிர்த்தாலும் விசாரணைகள் காத்திரமான முறையில் முன்னெடுக்கப்படும்!

13.6.14

இலங்கை அரசு எதிர்த்தாலும் இலங்கை அரசுக்கெதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அறிவித்துள்ளது.

மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
எனினும், நன்கு பரீட்சீக்கப்பட்ட நம்பகமான வழிமுறைகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்க்பபட்டுள்ளது.

விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காத போதிலும் விசாரணைகளை காத்திரமான முறையில் மேற்கொள்ள முடியும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் ருபர்ட் கொட்வில்லி (Rupert Colville) தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அரசாங்கங்களின் ஒத்துழைப்பு இன்றி ஏற்கனவே இவ்வாறான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

12 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றது.
விசாரணைகளை நடாத்துவதற்காக 1,192,000 அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :