ஐ.நா விசாரணைக் குழு நியமிக்கப்பட்டதை வரவேற்கிறது கூட்டமைப்பு

11.6.14

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான குழுவை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ளதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இதுதொடர்வபாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா,
இந்த விசாரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.
அனைத்துலக விசாரணைக்கான சான்றுகளை சேகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து கரிசனை கொண்டுள்ளோம்.
போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாகியும், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், இன்னமும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள், இராணுவ மயப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்து போயுள்ளனர்.

வடக்கில், நில அபகரிப்பினால், பலர் தமது காணிகளை இழந்து, இன்னமும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற முடியாத நிலையில் உள்ளனர்.
காணாமற்போனவர்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
காணாமற்போனவர்களின் உறவினர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு நியாயமான விசாரணைகள் நடத்தப்படுவது முக்கியம்.

அனைத்துலக விசாரணையின் அவசியம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுமக்களிடையே விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது.
சிறிலங்காவில் பொருத்தமான அரசியல் தீர்வு ஒன்று .காணப்படுவதும், 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று அதனை நடைமுறைப்படுத்துவதும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :