கர்ப்பிணியான சட்டத்தரணியின் வயிற்றைத் தடவிய நபர் கைது

10.6.14

கர்ப்பிணியான பெண் சட்டத்தரணி ஒருவரின் வயிற்றைத் தடவியதாக கூறப்படும் 43 வயதான இரு பிள்ளைகளின் தந்தையை களுத்துறை பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியக பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மல்காகுமாரி கடந்த 4 ஆம் திகதி கைது செய்துள்ளார்.

பெண் சட்டத்தரணி களுத்துறை நகர மத்தியிலுள்ள தனது அலுவலகத்திலிருந்து தனது வாகனத்துக்கு சென்ற போது அவரது வயிற்றைத் தடவி பாலியல் துஷ்பிரயோகம் செய்தபோது சட்டத்தரணி அந்நபருடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 சந்தேக நபர் ஹோட்டலொன்றில் நடைபெற்ற விருந்தொன்றில் கலந்துகொண்டு திரும்பும் போது இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துக்கள் :