விக்னேஸ்வரனுக்கு கீழ் பொலிஸ் அதிகாரம் வழங்குவதில் சிக்கல் இல்லை

1.6.14


வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் எந்த சிக்கல்களும் இல்லை என்று சிரேஸ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

மலையகத்தின் ஹட்டன நகரில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது கருத்துரைத்த அமைச்சர், 13வது அரசியல் அமைப்பில் இனப்பிரச்சினை தீர்வுக்கான விடயங்கள் உள்ளன. எனினும் அவை எழுத்து வடிவில் மாத்திரமே உள்ளன.
அதனை நடைமுறைப்படுத்தும் போதே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை வடக்கின் காணிப் பிரச்சினைகளை தீர்கக சுயாதீன ஆணைக்குழு ஒன்றின் அவசியம் குறித்து அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்துடன் வடக்கின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் இருக்கின்ற போது அவருக்கு கீழ் பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்படப் போவதில்லை.
எனினும் ஏனைய மாகாணசபைகளுக்கு அந்த பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதிலேயே பிரச்சினை உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்

0 கருத்துக்கள் :