மூன்று நாட்களில் 23 பேர் மரணம் மண்மேடு சரிந்து 14 பேர் உயிழப்பு

4.6.14

நாட்டில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணத்தால் கடந்த மூன்று நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  23  ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.  எஹலியகொடை யாய வீதி என்ற பிரதேசத்தில்  நேற்று  காலை  சுவர் ஒன்று உடைந்து விழுந்து அதில் சிக்குண்டு சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
 எஹலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான மிதுன் குமார என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இந்தப் பிரதேசத்தில்  பெய்த கடுமையான மழையால் உடைந்து வீழ்ந்திருந்த  மா மரத்தை பார்க்கச் சென்ற  போதே அதற்கு அருகில் இருந்த மதில் சிறுவன் மீது உடைந்து விழுந்து உயிரிழந்துள்ளான்.

பலங்கொடை பிரதேசத்தில் மேகொட, வத்துக்கார கந்தை என்ற பிரதேசத்தில்  வீடொன்றின் மீது மண் மேடு ஒன்று நேற்று இடிந்து  வீட்டின் மீது வீழ்ந்ததில் வீட்டிலிருந்த இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். சந்திரிகா குமாரி என்ற  24 வயது பெண்ணும் , 17 வயதான சமிலா தமயந்தி என்ற அவரது தங்கையுமேஇவ்வாறுஉயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் தாயாரும் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்க்ப்பட்டுள்ளார்.

கிரிவுல்லை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  இஹலநரங்கமுவ பிரதேசத்தில் நேற்றுக் காலை  வீடு ஒன்றின் மீது மண்மேடு ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.குறித்த வீட்டில் வேலை செய்து  கொண்டிருந்த மேசன் ஒருவரான  கிரிவுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான பாலசூரிய ஆராச்சிலாகே சுனில் ஜயதிலக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

0 கருத்துக்கள் :