உண்ட வீட்டுக்கு இரண்டகம்: 14 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்த ஆசாமி

28.6.14

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஃப்ரீமேன் டவுன்ஷிப் பகுதியில் வீடு, வாசல் இல்லாமல் அனாதையாக சுற்றித் திரிந்த நபருக்கு அப்பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் தங்க இடம் அளித்து, 3 வேளையும் சுடச்சுட ருசியான உணவும் அளித்து, கடந்த 10 ஆண்டுகளாக பராமரித்து வந்தனர்.

அந்த குடும்பத்தில் ஒருவராக ஆகிவிட்ட அந்த 54 வயது ஆசாமி, வீட்டில் யாருமில்லா நேரத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை மிரட்டி கற்பழிப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார். ஒரு கட்டத்தில் அவரது தொந்தரவு தாங்க முடியாத சிறுமி, பெற்றோரிடம் முறையிட்டார்.

10 ஆண்டுகளாக தந்தை போல் பாவித்து உணவும், தங்குவதற்கு இடமும் அளித்த அந்த குடும்பத்துக்கு துரோகம் செய்த அந்நபரை அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 மைனர் பெண்ணை மிரட்டி கற்பழித்த குற்றத்துக்காக அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 கருத்துக்கள் :