இசைப்பிரியா குறித்த புகைப்படங்கள் தொடர்பில் ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும்!- இராணுவம்

19.5.14

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் ஊடகப் பிரிவில் கட­மை­யாற்­றி­ய­ இசைப்பிரியா இரா­ணுவ காவ­லரண் முன்னால் பிறி­தொரு போராளிப் பெண் என சந்­தே­கிக்­கப்­படும் ஒரு­வ­ருடன் உயி­ரோடு உள்ள புகைப்­ப­டங்கள் புதி­தாக வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் அவை தொடர்பில் ஆய்வு செய்­யப்­பட்ட பின்­னரே இறுதி முடிவு எடுக்­கப்­படும் என பாது­காப்பு அமைச்சு தெரி­விக்­கின்­றது. சனல் 4 தொலைக்­காட்சி ஏற்­க­னவே இவ்­வா­றான பல புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்ள நிலையில் அவற்றின் உண்மைத் தன்மை உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் பாது­காப்பு தரப்பு தொடர்ந்தும் ஆய்­வு­க­ளையும் விசா­ர­ணை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்ள நிலையில், இந்த புகைப்­ப­டங்கள் தொடர்­பிலும் அதில் கவனம் செலுத்­தப்­படும் என பாது­காப்பு அமைச்சின் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய குறிப்­பிட்டார். குறித்த தொலை­காட்­சி­யா­னது ஏற்­க­னவே பல புகைப்­ப­டங்­களை ஆத­ராங்கள் இன்றி போலி­யாக முன­வைத்­தி­ருந்­த­தா­கவும் அதன் தொடர்ச்­சி­யாக இதுவும் இருக்கும் என தாம் நம்­பு­வ­தா­கவும் விசா­ர­ணையின் இறு­தியில் உண்மை வெளிச்­சத்­துக்கு வரும் எனவும் இதன்போது அவர் சுட்­டிக்­காட்­டினார். போலி ஆவ­ணத்தை கொண்டு இரா­ணு­வத்­துக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தும் வித­மாக தொடர்ச்­சி­யாக இவ்­வா­றான போலி புகைப்­ப­டங்கள் அவ்­வப்­போது வெளி­யி­டப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்ட பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய இவ்­வா­றான புகைப்­ப­டங்­களின் உண்மைத் தனமைக் குறித்து தொடர்ந்தும் சந்­தேகம் நில­வு­வ­தாக குறிப்­பிட்டார். ஏற்­க­னவே பாது­காப்பு தரப்பு சனல் 4 வீடியோ ஆத­ரங்­களை விஷேட ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் அந்த ஆய்­வினுள் இந்த புகைப்­ப­டங்கள் தொடர்­பி­லான விட­யமும் உள்­ள­டங்­கி­யி­ருக்கும் என தான் நம்­பு­வ­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார். முன்­ன­தாக படை­யி­னரால் இசைப்பிரியா மீட்­கப்­பட்டு அழைத்து வரு­வது போன்ற காட்­சி­களை சனல் 4 வெளி­யிட்­டி­ருந்­தது. எனினும் இறு­தி­ யுத்­தத்தின் போது படை­யி­ன­ரு­ட­னான மோதலில் இசைப் பிரியா கொல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இந் நிலை­யி­லேயே இசைப் பிரியா படை­யி­னரின் காவலரன் ஒன்றின் முன்னிலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்துக்கு மேலதிகமாக மேலும் சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

0 கருத்துக்கள் :