வெருகல் பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு

6.5.14

திருகோணமலை வெருகல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லடி, புன்னையடி மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகள் இன்று காலை இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தீவிர தேடுதல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை 6 மணியளவில் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த பகுதிக்குள் அரச உத்தியோகத்தர்களோ அல்லது ஏனையவர்களோ உட்செல்லவோ வெளிச்செல்லவோ அனுமதிக்கப்படவில்லை .

இச்சுற்றிவளைப்பு தேடுதலின் போது குறித்த பகுதியில் வசிக்கும் 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கல்லடியிலுள்ள மலை நீலியம்மன் கோயில் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் கல்லடி பகுதியைச் சேர்ந்த பலர் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவலையடுத்தே தேடுதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :