வவுனியா: சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேக நபர் தப்பியோட்டம்

19.5.14

சுந்திரபுரம் பிரதேசத்தில் 14 வயதான சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுமியின் சகோதரின் கணவர் சிறுமியை 5 மாதங்களுக்கு முன்னர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
சிறுமி 5 மாத கர்ப்பியாக இருப்பதாகவும் சம்பவம் குறித்து நேற்று வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
சிறுமி தற்போது, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :