ஜனாதிபதியைச் சந்திக்கத் துடிக்கும் விமல் வீரவன்ச

15.5.14

அரசாங்கத்துக்குள் தற்போது பிரச்சினையை ஏற்படுத்தும் அமைச்சராக விளங்கும் விமல் வீரவன்ச, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கு எதிர்ப்பார்த்திருக்கிறார்.

தமது தேசிய சுதந்திர முன்னணியின் 2வது தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய யோசனை குறித்து பேச்சு நடத்தவே இந்த சந்திப்பை அவர் எதிர்ப்பார்ப்பதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
13வது அரசியல் அமைப்பு நடைமுறை தொடர்பில் எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் மாநாட்டில் யோசனை நிறைவேற்றப்பட்டது.
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தென்னாபிரிக்காவின் சிரில் சமபோஸா இலங்கைக்கு வரவுள்ள நிலையிலேயே விமல் வீரவன்சவின் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துக்கள் :