புதிய அரசில் கூட்டணி கட்சிகளுக்கு இடமில்லை! பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்!

18.5.14

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 330 இடங்களை கைப்பற்றி உள்ளது. பாஜக மட்டும் 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்த நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை டெல்-யில் நடைபெறும் பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி முறைப்படி பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார்.

இதனைத் தொடர்ந்து அன்று மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்திலும், அக்கூட்டணியின் நாடாளுமன்றத் தலைவராக நரேந்திர மோடி தெர்வு செய்யப்பட உள்ளார். அதற்கு பிறகு நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பதவி ஏற்கும்.

இதனிடையே, மத்தியில் நரேந்திர மோடி தலைமையில அமையும் புதிய அரசில் கூட்டணி கட்சிகளை சேர்ப்பதில்லை என்று பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யும்போது கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று பாஜக உயர்மட்டத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல் பாஜக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
(பாஜக 282, சிவசேனா 18, தெலுங்கு தேசம் 16, லோக்ஜன சக்தி 6, அகாலிதளம் 4, அப்னாதளம் 2, என்.ஆர்.காங்கிரஸ் 1, பா.ம.க. 1)

 

0 கருத்துக்கள் :