பெண் ஆசிரியையை துரத்தி துரத்தி கொட்டிய குளவிகள்

8.5.14

ஹட்டன் - ரொசல்ல பகுதியில் இன்று (08) காலை பாடசாலை ஆசிரியை ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பின்னோயா கணேசா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவரே குளவி கொட்டுக்கு உள்ளாகினார்.

குளவிகள் சூழ்ந்து கொட்டியபோது அங்கு விரைந்து வந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு வட்டவளை வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஆசிரியை தற்போது  சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இவ்விடத்தில் குளவி கொட்டுதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட 4 தொழிலாளர்களும் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :