நோர்வேக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் தொடங்குகிறது ஜாதிக ஹெல உறுமய

17.5.14

நோர்வேக்கு எதிரான போராட்டத்தை ஜாதிக ஹெல உறுமய மீண்டும் நாளை ஆரம்பிக்கவுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்பாடு நடைமுறையில் இருந்த 2002-2005 காலப்பகுதியில் நோர்வேக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தது.

இந்தநிலையில், போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கழித்து, நாளை மீண்டும் நோர்வே துதரகத்துக்கு எதிரான போராட்டத்தில் ஜாதிக ஹெல உறுமய குதிக்கவுள்ளது.

சுதந்திர சதுக்கத்தில் இருந்து நோர்வே தூதரகம் நோக்கி எதிர்ப்புப் பேரணியை நடத்தவுள்ளது.
சிறிலங்காவினால் தேடப்படும் விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பின் தலைவராக உள்ள நெடியவனை தங்க வைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
நாளை பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் இந்தப் பேரணி, சிறிலங்காவிடம் நெடியவனைக் கையளிக்கக் கோரும் மனுவை நோர்வே தூதரகத்திடம் கையளிப்பதுடன் நிறைவடையும்.

அதேவேளை, நாளை பிற்பகல், கொழும்பு நகர மண்டபத்தில், போர் வெற்றி கொண்டாட்டத்தையும் ஜாதிக ஹெல உறுமய தனியாக நடத்தவுள்ளது.

0 கருத்துக்கள் :