இரத்த தான நிகழ்வுகளுக்குக் கூட சிறிலங்கா அரசு வடக்கில் தடை

19.5.14

முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்றழிக்கப்பட்ட ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூரப்படும் நிலையில், வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் இரத்த தான நிகழ்வைக் கூட நடத்த தடைவிதித்துள்ளனர்.

போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் எந்த நிகழ்வையும் நடத்த வடக்கில் தடைவிதித்துள்ள சிறிலங்கா படையினர் ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் கடந்த சிலநாட்களாக இடையூறுகளை ஏற்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில், இன்று சில இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வுகளைக் கூட சிறிலங்காப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இரத்த தான நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்று சிறிலங்கா காவல்துறை மூலம் யாழ். போதனா மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சண்டே ரைம்ஸ் வாரஇதழ் தெரிவித்துள்ளது.

அதேவேளை சிறிலங்கா அரசாங்கத்தின் தடைகளையும் மீறி நினைவு கூரல் நிகழ்வுகள் நடத்தப்படும் என்று பல்வேறு தரப்புகளும் அறிவித்துள்ளன.

0 கருத்துக்கள் :